இயற்கையாய் இரு - இயல்பாய் இரு !!!

ஊர்  உறங்கி கொண்டிருகின்றது என்பதற்காக
சூரியன் உதயத்தை தள்ளி போடுவதில்லை ...

எல்லோர் வீட்டிலும் குளிர் சாதனம் இருப்பதினால்
மரங்கள் தென்றல் தருவதை நிறுத்துவதில்லை ...

எத்துனை எத்துனையோ இசை கருவிகள் வந்த போதும்
பறவைகள்  இசைப்பதை  நிறுத்துவதில்லை ...

வண்ண மிகு வான வேடிக்கைகள் வந்த பின்பும்
விண்மீனோ வானவில்லோ வந்து போவதை நிறுத்தவில்லை ...

குடைகள் கண்டு பிடிக்கபட்டதனால் கோபம் கொண்டு
மழை சாரலை நிறுத்துவதில்லை ...

கப்பல்கள் தங்கள் பிராந்தியத்தில் நீந்துவது என்பதற்காக
மீன்கள் துள்ளி விளையாடுவதை நிறுத்துவதில்லை ...

மற்றவர்களுக்காக உன்னை என்றுமே மாற்றிகொள்ளதே ...
நீ நீயாய் இருப்பதே இயற்க்கை , அதுவே இந்த இயற்கையின் எதிர்பார்ப்பும் ...

Comments

Anonymous said…
wonderful TKTK ... one of the best kavithais I've read -- Sathish Inkershal

Popular Posts