எண்ணங்கள்

From my old diary : Date : 15-August-2002
  • கீழ் நிலையில் உள்ளவர்கள் வாழ்வின் தன்மைகளை புரியாமல் செயலாற்றி தனக்கும் பிறருக்கும் துன்பங்களை சங்கிலி தொடர் போல விளைவித்துக்கொண்டே போகின்றார்கள் 
  • மனத்தின் போக்கிற்கு எண்ணத்தை விட்டு விட்டால் அது அவ்வளவு நல்லதில்லை 
  • எண்ணம் உணர்ச்சி வயப்படும்போது அதுவே ஆசை, சினம், கடும் பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாக விளங்குகின்றது 
  • எண்ணம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும், எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்து கொண்டிருக்க வேண்டும், எண்ணம் தன்னையே கண்காணித்துக்கொண்டு தன்னையே நெறிப்படுத்தி கொண்டு , தன்னையே திருத்தி கொண்டிருக்கவேண்டும் 
  • ஒரு எண்ணம் ஒரு முறை மனதில் தோன்றிவிட்டால் போதும், அது உயிரணுக்களில் பதிவாகி அவற்றிற்கு இடையே பிரதிபலித்து மீண்டும் பதிவு, மீண்டும் பிரதிபலித்து என்றாகி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்... 
  • எண்ணத்தை அடக்க முயன்றால் அலையும் , அறிய முயன்றால் அடங்கும்.. 
  • எண்ணத்தின் பேரிலேயே எண்ணத்தை திருப்பிவிட்டு ஆராய வேண்டும். அப்போது அந்த எண்ணம் மாறி ஆராய்ச்சியும் விழிப்பு நிலையும் மிச்சப்படும் ... 
  • பிறர் மனத்தூண்டுதலால் ஏற்படும் எண்ணங்கள் பெரும்பாலும் நல்ல எண்ணங்களாக இருப்பதில்லை ... 
  • தோன்றும் காரணத்திற்கு காரணம் கண்டுபிடித்தால் இன்னும் சிறப்பாக நிர்வகிக்க முடியும் 
இந்த எண்ணம் பிறக்க காரணம் என்ன? 
இது செயலானால்  என்ன விளையும் ?
இந்த எண்ணம் தேவையா வேண்டாமா ? 

Comments

Popular Posts