கருங்கண்ணி பருத்தியும், காங்கேயம் காளையும்

Karunganni Paruththi (cotton)
ஆள் பாதிதான், ஆடையே மீதமாய் இருந்து மானஉணர்வை தற்காத்து, அழகினை மிகைப்படுத்தி, காலநிலைக்கேற்ப உடலைப் பாதுகாத்து, மனிதனின் மேம்பாட்டை உயர்த்திக் காட்டுகிறது. மக்களின் பெரும்பான்மை எண்ணம் "உணவில் தன்விருப்பமென்றால், உடுத்தல் பிறர் விருப்பத்திற்கு அமையவேண்டும்." இது தனிமனித எண்ணமாக இல்லாமல், பருத்தி உற்பத்தியில் ஏகாதிபத்திய எண்ணமாயிற்று. ஆம், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா பருத்தி உற்பத்தியில், நெய்தல் கலையில் சிறப்புற்றிருந்ததாக சிந்துசமவெளி, மோகஞ்சதாரோ  அகழ்வாராய்ச்சிகள் கூறுகையில், இன்றோ நம் நெசவாளர்கள் வாழ்விழந்து வாடிக்கிடக்கின்றனர். சரிவிற்கு காரணம் மேலைநாடுகளின் ஆதிக்கமே.

நாட்டு பருத்தியின் சிறப்பு 
உலகில் சுமார் 50 பருத்தி இனங்களிருந்தாலும், Gossypium hirsutum, Gossypium barbadense, Gossypium arboretum, Gossypium herbaceum என்கிற 4 மட்டுமே மனிதர்களால் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் G. arboretum என்ற இந்திய இனம்தான் முதன் முதலில் தோன்றியதாக பரிணாம அறிவியல் கூறுகிறது. நாட்டுப்பருத்திகள் (G. arboretum, G. herbaceum) மட்டுமே உற்பத்திசெய்து, நம் நாட்டிலே நெய்து, நம் நாட்டிலே விற்றபோது நாம் அடைந்த நன்மைகள் ஏராளம் ஏராளம். நாட்டுப்பருத்திகள் வறட்சியைத் தாங்கக்கூடியது, உவர் நிலங்களில் விளையக்கூடியது, பூச்சித்தாக்குதலின்றி நோய்எதிர்ப்புசக்தி உடையது, ஊடுபயிர்களுக்கு ஏற்றது, மேலும் விதைகள் முளைப்புத்திறனுடையவை. அதுமட்டுமில்லாது சத்தான உணவாகவும்அம்மை நோய்க்கு (chickenpox) மருந்தாகவும்பயன்படுகிறதுஇன்றும் கிராமங்களில் வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைக்கப்பட்டு சிறுஉருண்டைகளாக்கப்பட்டு கிருமிக்கு எதிராக கொடுக்கப்படுகிறது.கூடுதலாக பருத்தி பிஞ்சின் பால் கொடுக்கப்படுகிறதுஇதன்மூலம் உடல் குளிர்ச்சியடைந்து அம்மை நோய்க்கிருமிகள் உடலில் வாழ்வதற்கான சூழல்தடைபெறுகிறது.

அமெரிக்க புரட்சியும் இங்கிலாந்தின் தேவையும்    
பதினேழாம் நூற்றாண்டில், அமெரிக்க பருத்தியினை மூலமாகக்கொண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் லேன்கஷிரே நூற்பாலைகள் இயக்கப்பட்டன. அமெரிக்க புரட்சியின் (1775-83) விளைவாக பருத்தி வரவு குறைய ஆரம்பித்தது. இங்கிலாந்தின் வணிகமூளை தன் ஆதிக்கத்திலிருந்த இந்திய துணைக்கண்டத்தை குறிவைத்து. ஆனால் இந்திய பருத்தியிழைகள் நீளம் குறைந்தவை, இங்கிலாந்து இயந்திரத்திற்கு ஏற்றவை இல்லை. ஏனெனில் அவை அமெரிக்காவின் நீண்டஇழைக்கொடுக்கும் பருத்திக்கு (G. hirsutum) ஏற்றவாறு உருவாக்கப்பட்டவை. இந்த தருணத்தில்தான் அமெரிக்க இனத்தை இந்தியாவில் பயிரிடுவதுகுறித்து இங்கிலாந்து சிந்திக்க ஆரம்பித்தது. நூலிழை அளவு குறையென்று இந்தியரை சிறுமைக்கூறி, அமெரிக்க விதைகளை இந்திய மண்ணில் புகுத்தியது. பின்னர் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, துணியாக உற்பத்திசெய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டது. மேலும் இயந்திரதறிகளின் நுழைவினால், இந்திய நூட்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நலிவுற்றனர். காந்தியடிகள் அந்நியப்பொருட்களை தீயிட்டுக்கொளுத்திய  நிகழ்வு நினைவுக்கு வருகிறதா?

Cotton mills / machines with predefined structure was not able to handle premium cotton what we had which is still used in medical industry 
அந்நிய ஆதிக்கம் 
இந்திய சுதந்திரத்தின்போது 97% நாட்டுப்பருத்தியும் வெறும் 3% அமெரிக்கபருத்தியும் இருந்தது. இன்று நிலை தலைகீழ், ஆம் 97% அமெரிக்க பருத்திரகங்கள். அதனால் என்ன எங்கிறீர்களா, இதில்தான் அந்நியரின் வணிகமும், நமது அறியாமையும் மறைந்திருக்கிறது. அமெரிக்க பருத்தியை ரசாயனத்தில் ஊறவைத்து விதைக்கவேண்டும், எளிதில் பூச்சித்தாக்குமென்பதால் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு கட்டாயமாகிறது. இவையனைத்தையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும். மேலும் உற்பத்திசெய்த பருத்திவிதைகளை பயிர்செய்ய இயலாது. அத்தனையும் மலட்டுவிதைகள், மறுமுறைக்கு விதைகளை அவர்களிடம் வாங்கவேண்டிய நிலை. இதுகுறித்த விழிப்புணர்வு மெல்ல தலைத்தூக்குகையில், மரபணு மாற்றப்பட்ட (Bacillus thuringiensis - Bt) பயிர்கள் உட்புகுத்தப்பட்டன. இந்தரகங்கள் தன் திசுக்களில் பூச்சிக்கொல்லியை உற்பத்திசெய்பவை. ஆனால் அது பருத்தியை பெரும்பான்மையாய் தாக்கும் பூச்சியினத்தை மட்டுமே கொல்லும், மற்றசில பூச்சிகளுக்கு மருந்துகளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கடந்த 3 நூற்றாண்டுகளில் நாம் இழந்தது தரமான வீரியரக பருத்திகள் எத்தனை எத்தனையோ (அவற்றில் சில இப்போது இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்!). நினைவில் நிற்பவை காலா (குஜராத்), புந்துரு (ஆந்திரா), புலே  தன்வந்திரி (மகாராஷ்டிரா), கோமிலா (மேகாலயா), ஜெயதர் (கர்நாடகா), வங்கபருத்தி (ராஜஸ்தான்). தமிழ்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட வெள்ளைக்கண்ணி, நாடான் பற்றிய செய்திகளில்லை. கருங்கண்ணி பருத்திகள் பெரம்பலூர், திண்டுக்கல் பகுதிகளில் உயிர்பிக்கப்படுகிறதெனவும், உப்பம் வகைகள் தூத்துக்குடியில் இருப்பதாகவும் தெரியவருகிறது.
------
கருங்கண்ணி பருத்திகள் எங்கள் நிலங்களிலே நேரடியாக விதைக்கப்பட்டு, மரபணு மாற்றப்பட்ட பருத்திவகையுடன் ஒப்பிடப்பட்டன. கருங்கண்ணி பருத்திகள் அதிக உற்பத்திக்கொடுத்ததுடன் பூச்சித்தாக்குதலும் 15% குறைவு!
கொல்லவீரன்பட்டி, டி.கல்லுப்பட்டி , மதுரை 
------

நாயும், கோழியும், நாட்டு காய்கறிகளும் என்ன விதி விலக்கா 
பருத்தியின் நிலைதான் இன்றைக்கு கோழிகளுக்கும்அளவு பெரிதாக்கப்பட்ட முட்டைகள் மற்றும் மென்சதைகளுக்காக நாட்டுஇனங்களைஅழித்துக்கொண்டிருக்கிறோம்ஆதிகாலத்தில் சிவனின் அம்சமாகவும் (shvan), சொர்க்கத்தின் பாதுகாவலனாகவும்ஏன் கோவிலின் கருவறைகளில் வீற்றிருந்தநாய்கள்தான் (அலங்குஇன்று தெரு (சொறிநாய்களாக அலைந்துக் கொண்டிருக்கின்றனதிருடர் வந்தாலும் சமர்த்து பிள்ளையாய் அமைதிக்காக்கும் செல்லவெளிநாட்டு நாய்கள்தான் இன்று வீடுகளில் அலங்காரமாய் படுத்துக்கிடக்கின்றன. இவற்றின் தீனிகளும்மருந்துகளும்... வேறுயாருக்கு வெளிநாட்டினருக்குதான்கொள்ளைலாபம்சரமா (அனைத்து நாய்களின் தாய்கடவுள்சாபம் நம்மைச்சாருமோ?

வரும் முன் காப்போம் !!!

We worship cows and bulls as gods... 
இதே நிலை நம் மாடுகளுக்கும் வேண்டுமா? விழித்திருப்போம்! இந்தியாவில் இன்றும் பசுக்கள் புனிதமாக, லெட்சுமியின் வடிவாக கருதப்படுகின்றன. காரணம், ஆரோக்கியமான பால்தருவதால் மட்டுமல்ல, கழிவுகளும் கிருமிநாசினியாகவும், மருந்தாகவும் பயன்படுவதால். நமது இந்த நாட்டுரக பசுக்களின் பயன்பாட்டிற்கு காப்புரிமைகள் உள்ளன. ஆனால் அவை நமக்கு பரிச்சியமில்லை, நமக்கு தெரிவிக்கப்பட்டதெல்லாம் (அந்நியரால்) இந்திய மாடுகளில் பால் உற்பத்தி குறைவு. நிவர்த்திசெய்ய ஜெர்ஸி போன்ற யூரோப்பிய வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னனிலுள்ள குறையென்ன தெரியுமா? பால் சிறந்த உணவு என்றாலும், ஆரோக்கியம் அதில் நிறைந்திருக்கும் புரதத்தில் உள்ளது. இந்திய பசுக்களின் பாலிலுள்ளது ஏ2 வகை புரதம். இது அதிக சத்துள்ளது; ஏ1 வகை புரதம் (வெளிநாட்டுரக பசுக்களின் பாலிலுள்ளது) போன்று ஒவ்வாமை, இன்சுலின், மூளைக்குறைபாடுகளை (ஆட்டிசம், சிஸ்னோபிரேனியா) ஏற்படுத்துவதில்லை. வெளிநாட்டுரக மாடுகளுக்கு இரண்டாம் நிலை உணவு கொடுக்கப்படுகிறது, எப்படித் தெரியுமா? மாட்டின் முதுகில் துளையிடப்பட்டு ரசாயனங்கள் ஊற்றப்படுகின்றன, அதிக பாலை சுரப்பதற்கு!

Hole in the back to dump food and chemical which is against nature and painful... 


மேலும் வெளிநாட்டிலிருந்து ஊசிமருந்துகள் வருகின்றன, நமது பசுக்கள் பசுங்கன்றுகள் மட்டுமே ஈனுவதற்கு, காளைகள் இனி பிறக்கப்போவதில்லை. இதனால் வரபோகும் விளைவுகள் (i) சிறு/குறு விவசாயிகளும் உழுவதற்கு டிராக்டர் பயன்படுத்தவேண்டும், இந்திய தேசம் முழுவதும் மண் கடினத்தன்மை பெறப்போகிறது. (ii) நாட்டுரக மாட்டுசாணமே உரங்களுக்கு ஏற்றது (பயன்தரும் நுண்ணுயிர்கள் வளர ஏற்ற தன்மையுடையது), இந்தவகையில் இயற்கை உரம் முற்றிலும் மடியப்போகிறது. மாடுகளுக்கும் விவசாயத்திற்குமான இணைப்பிற்கு வந்துவிட்டோமா. இங்குதான் நமது திட்டமிடப்பட்ட பாரம்பரிய வாழ்வியல் துவங்குகிறது. அறுவடைக்குப்பின், ஜல்லிக்கட்டு நடைபெறும் (அதே நேரத்தில் மாட்டுச்சந்தைகளும் நடைபெறும்). ஜல்லிக்கட்டில் அடங்காமல் பாய்ந்த காளைக்கும், காளையை அடக்கிய இருக்கால் காளைக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது மாட்டுச்சந்தையில். விளைவு - வீரியரகங்கள் உற்பத்திப்பெருகி, விவசாயத்திற்கு ஏர் பூட்டப்பட்டு, மாட்டு சாணம் உரமாகவும், கோமியம் பூச்சிக்கொல்லியாகவும், நாட்டுரக பயிர்கள் விளைவிக்கப்பட்டன.  இதில் செலவீனமும் குறைவு, சத்துக்களும் அதிகம்.

எதிர்மறை மாற்றங்கள் வரக்காரணம் வெளிநாட்டு வாணிபர்களே. இயற்கைவழி நாட்டுரக விவசாயம் ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது. அதேநிலையை இன்று நாட்டுரக மாடுகளும் எதிர்க்கொண்டிருக்கின்றன. அந்நியரின் சொல்லுக்கு செவிசாய்த்து சில இந்திய அமைப்புகள் ஜல்லிக்கட்டிற்கு தடை சொல்கிறது, ஏன்? ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் இந்திய மாடுகள் பராமரிக்கப்படுகின்றன, இதனால் இந்தியா சத்துமிக்க பால் உற்பத்தியிலும், விவசாயத்திலும் சிறந்து விளங்கும். அந்நிய மூளை இங்கு வேலை செய்கிறது, நாம் ஜல்லிக்கட்டில் காளைகளை துன்புறுத்துவதாக கருத்துக்களைப் பரப்பி நம் இனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, அவர்களது இனங்களை இங்கு முற்றிலும் புகுத்த முற்படுகின்றது.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்", "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற சொற்கள் முளைத்த பூமியிலா, ஓர் உயிர் துன்புறுத்தல் நிகழ்வு ஊர்கூடி நடக்கப்போகிறது? குதிரைப் பந்தயங்களில் குஷன் சவுக்குகள் 8 முறை சட்டத்தால் அனுமதிக்கப்பட்டிருகையில், விதிமுறைகளுடன்கூடிய ஜல்லிக்கட்டு நடைபெற சட்டமிடுதலில் தடையென்ன?

கருங்கண்ணி பூக்கட்டும்!

காங்கேயம் பாயட்டும்!!

#WeDoJallikattu #WeNeedJallikattu #SaveTNFarmers #Tamil

Comments

Popular Posts