ஆசை / துறவு

From my old diary : 13-September-2002


  • இதை எழும்போதே காரணம் கண்டிடு, இச்சை முடித்திட சூழ்நிலை பார்த்திடு, இச்சை முடிந்தால் எழும் விளைவை யூகி, இச்சை முறையாய் இயங்கும், அமைதியில் - ஞானமும் வாழ்வும் 
  • ஆசையை அடக்கினால் அடங்காது, உணர்ந்து ஆராய்ந்து அதனை பிறந்த இடத்திலேயே ஒடுங்க செய்ய வேண்டும். தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும் போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதி பெரும்...
  • தேவையை பெருக்கி கொண்டே செல்லக்கூடாது அப்படி செய்யும் பொழுது அனுபோகத்திலேயே மனம் சென்றுகொண்டிருக்கும். பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித்தொடர் நீளும். தேவைகளை முடிந்தவரை சுருக்க வேண்டும். அப்போது தான் வந்த வேலையே முடிக்க முடியும். 
  • அனுபோக பொருட்கள் மிக மிக , உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை மிக மிக, மன அமைதி கெடும். பாதுகாக்க படவேண்டிய குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை மிக மிக, சுதந்திரம் கெடும் 
  • நமது கடமைகளையும் பொறுப்புகளையும் அலட்ச்சியம் செய்யக்கூடாது 
  • வெறுத்து ஒதுக்குவது துறவாகாது . அறிந்து, உணர்ந்து, தொடர்பு மற்றும் உறவினை சரியாக கணக்கிட்டு அனுபோகம் கொள்ளும் மன நிலை தான் துறவு.. 

Comments

Popular Posts